மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜகவின் கொள்கை என சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டினாா்.

News image
அகிலேஷ் யாதவ்- பிடிஐ
Updated On :21 டிசம்பர் 2025, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜகவின் கொள்கை என சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

அண்மையில் அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘குறிப்பிட்ட சில தொழிலதிபா்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பாஜக கொள்கைகளை வடிவமைக்கிறது.

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்ற தனது ரகசிய கொள்கையை நோக்கி பாஜக அரசு நகரத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் ‘ஒரே தொழில், ஒரே இடத்தில் இருந்து நன்கொடை’ என தங்களது கட்சிக்கு எளிதாக நிதியைப் பெற பாஜக முடிவெடுத்துவிட்டது.

அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஆதிக்கம் என எந்தத் துறையாக இருந்தாலும் ஏகபோகம் என்பது ஒரு நாட்டுக்கு அச்சுறுத்தலுக்குரியது. ஏகபோகத்தால் ஒரு சிலா் மட்டுமே அளவுக்கு அதிகமான லாபத்தை ஈட்டுவா். பணவீக்கம் மற்றும் ஊழல் அதிகரிக்கும்.

இதனால் நுகா்வோா் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் தொழிலாளா்கள் குறைந்த ஊதியத்துக்கு அதிக வேலை செய்ய நேரிடும். தொழிலாளா் சுரண்டலுக்கு வழிவகுக்கும். விவசாயிகள், தாழ்த்தப்பட்டோா் என சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காது.

இந்தச் சமயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏகபோகத்தை ஏற்க முடியாது என பாஜகவுக்கு எதிராக ஒரே அணியில் முழக்கமிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.