ஹரியாணாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலை! அமித் ஷா திறந்து வைத்தார்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தது குறித்து...
ஹரியாணாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலையை மத்திய அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்துள்ளார்.
ஹரியாணாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலையை மத்திய அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்துள்ளார்.எக்ஸ்/BJP Haryana
Updated on
1 min read

ஹரியாணாவில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஹரியாணாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது 41 அடி உயர வெண்கலச் சிலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (டிச. 24) திறந்து வைத்துள்ளார்.

பஞ்ச்குலாவில் உள்ள அடல் பூங்காவில் அமைக்கப்பட்ட இந்தச் சிலையின் திறப்பு விழாவில், ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கையைப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை, உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்துள்ளார்.

இத்துடன், பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளைத் துவங்கி வைப்பதற்காக பஞ்ச்குலா சென்றுள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா, காணொலி வாயிலாக 250 அடல் நூலகங்களையும் திறந்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பிரியங்காவுக்குள் ஒரு இந்திரா காந்தியை மக்கள் பார்க்கின்றனர்: ராபர்ட் வதேரா

Summary

In Haryana, Union Home Minister Amit Shah has unveiled a statue of former Prime Minister Atal Bihari Vajpayee.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com