

தில்லியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 660 பேரை 24 மணிநேரத்தில் போலீஸார் கைது செய்தனர்.
புத்தாண்டு வருகையையொட்டி, சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக தில்லி போலீஸார் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் ஆகத் நடவடிக்கையில் ஆயுதங்கள், சட்டவிரோத பணம் மற்றும் மதுபானம், போதைப் பொருள், திருடப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பண்டிகை காலத்தில் குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக ஆயுதச் சட்டம், கலால் சட்டம், என்டிபிஎஸ் சட்டம், சூதாட்டத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 660 பேரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 24 நாட்டுத் துப்பாக்கிகள், 44 கத்திகள், 10 கிலோ கஞ்சா, 231 இருசக்கர வாகனங்கள், 350 திருட்டு மொபைல் போன்கள் மற்றும் 22,500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சட்டவிரோத மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2,800-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, குற்றங்கள் இல்லாத புத்தாண்டை உறுதி செய்யும்வகையில் சுமார் 850 பேர் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.