எஸ்ஐஆர் பணிகளில் ஏஐ மூலம் மோசடி! மே.வங்கத்தில் 60 பேர் மரணம் - மமதா குற்றச்சாட்டு!

எஸ்ஐஆர் பணிகளால் மேற்கு வங்கத்தில் 60 பேர் மரணமடைந்ததாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றச்சாட்டு...
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி(கோப்புப் படம்)
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் சுமார் 60 பேர் மரணமடைந்ததாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

பங்குரா மாவட்டத்தில் இன்று (டிச. 30) நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட முதல்வர் மமதா பானர்ஜி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் செய்யறிவு (ஏஐ) மூலம் மோசடி செய்யப்படுவதாகவும், மேற்கு வங்க மக்கள் கொடுமை செய்யப்படுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசியதாவது:

“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் செய்யறிவு மூலம் மோசடி செய்யப்படுகிறது. மேற்கு வங்க மக்கள் எஸ்ஐஆர் பணிகளால் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

இதனால், சுமார் 60 பேர் மரணமடைந்துள்ளனர். ஆவண சரிபார்ப்பு விசாரணைக்காக முதியவர்கள் நேரில் அழைக்கப்படுகிறார்கள்.

சட்டப்பூர்வமான ஒரு வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டால்கூட தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முற்றுகையிடும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைவதற்கு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், தேர்தல் சமயத்தில் மட்டும் சோனார் பங்களா என உறுதியளிக்கும் பாஜக, அவர்கள் ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
கைப்பற்றப்பட்ட 200 கிலோ கஞ்சாவை எலிகள் அழித்துவிட்டன - ஜார்க்கண்ட் காவல் துறை தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com