மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறை தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாததால், பங்குச் சந்தைகளில் ரயில்வே துறை தொடர்பான பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன.
ஐஆர்எஃப்சி பங்குகள் 6.4 சதவீதம் சரிவடைந்து ரூ.141.45க்கும் ஆர்பிஎன்எல் 9 சதவீதம் சரிந்து ரூ.433.45க்கும் ஐஆர்சிஓஎன் பங்குகள் 9.3 சதவீதம் சரிந்து ரூ.200க்கும், ரயில்டெல் பங்குகள் ரூ.379க்கும் விற்பனையாகின.
வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2024-25ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே நிதி ஒதுக்கீடு ரூ.2.52 லட்சம் கோடியாக இருந்ததே, இந்த ஆண்டும் நீடிக்கும் என்று பொது பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியே இந்த ஆண்டும் ஒதுக்கப்படுவதால், இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு மத்திய அரசு பாராமுகமாக இருந்துவிட்டதாகக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க.. வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?
புதிய வந்தேபாரத் ரயில்கள், படுக்கை வசதிகொண்ட வந்தேபாரத் ரயில்கள், ரயில்களில் கவச் தொழில்நுட்பம் என மேம்படுத்தப்படுவதற்கான அறிவிப்புகள் மட்டும் வெளியான நிலையில், இதற்கேற்ப நிதி ஒதுக்கப்படாததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதாவது 1924ஆம் ஆண்டுதான், பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே பட்ஜெட் பிரித்து தனியாக தாக்கல் செய்யும் நடைமுறை தொடங்கியது. அது முதல் 92 ஆண்டுகால பழக்கம் 2017 - 18ஆம் நிதியாண்டில் மாற்றப்பட்டு, ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த முறை பொது பட்ஜெட்டில் ரயில்வேக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ரயில்வே துறையினருக்கும் சற்று வருத்தத்தையே அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதுபோல, விமான நிலையங்களை மேம்படுத்தும் உதான் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூ.800 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 32 சதவீதம் குறைவாக அதாவது ரூ.540 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய பட்ஜெட்டில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.2,873.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2,805.18 கோடியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேகமெடுக்காத வருவாய் வளா்ச்சி: டிரென்ட் பங்குகள் 12% மேல் சரிவு

ஐ.டி. பங்குகள் அபாரம்: 2-ஆவது நாளாக பங்குச் சந்தை எழுச்சி!

அறிமுகமான முதல் நாளிலேயே ஹெக்ஸாகன் நியூட்ரிஷன் பங்குகள் 13% உயர்வு!

என்எல்சி இந்தியா பங்கு வெளியீடு: பங்குகள் வேண்டி 5 மடங்கு அதிக விண்ணப்பம்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



