புதுதில்லி: என்.எல்.சி இந்தியா 3 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்வதற்கான மத்திய அரசின் திட்டத்தின் முதல் நாளிலேயே ரூ. 4,158 கோடி அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் பதிவானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சில்லறை முதலீட்டாளர் அல்லாதவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2.49 கோடிப் பங்குகள் என்ற அடிப்படை அளவை விட அதிகமாக, 13.03 கோடிக்கும் அதிகமான பங்குகளுக்கு அவர்கள் விருப்பம் கோரினர். இதற்கான விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 319.06 ஆக இருந்தது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த 'ஆஃபர் ஃபார் சேல்' மூலம், என்எல்சி இந்தியா சுமார் 4.16 கோடிப் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ. 303 என்ற குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்தநிலையில், குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் மத்திய அரசுக்கு சுமார் ரூ. 1,200 கோடி வருவாய் கிடைக்கும். இந்தக் குறைந்தபட்ச விலையானது, மும்பை பங்குச் சந்தையில், என்.எல்.சி இந்தியா பங்கின் இறுதி விலையான ரூ. 335.65-ஐ விட இது 9.73 சதவீதம் குறைவானதாகும்.
மும்பை பங்குச் சந்தையில் என்.எல்.சி இந்தியா பங்குகள் முந்தைய நாள் இறுதி விலையை விட 2.32 சதவீதம் சரிந்து, ரூ. 327.85 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
தற்போதிய நிலையில், என்எல்சி இந்தியாவில் 72.20% பங்குகளைக் கொண்டுள்ளது மத்திய அரசு.
Summary
The government offer for sale of up to 3 per cent stake in NLC India got over-subscribed on the first day.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்எல்சி நிறுவனத்தின் 3% பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசு!

மே மாதத்தில் ‘கோல் இந்தியா’ நிலக்கரி உற்பத்தி 12% சரிவு!

கோல் இந்தியா பங்கு விற்பனை: முதல் நாளிலேயே ரூ.19,000 கோடிக்கு நிறுவன முதலீட்டாளா்கள் விண்ணப்பம்!

24,200-க்குக் கீழ் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு; தகவல் தொழில்நுட்பப் பங்குகள் உயர்வு!!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




