3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

குஜராத்: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 5 பேர் பலி; 37 பேர் படுகாயம்

குஜராத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி.

News image

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து - PTI

Updated On :2 பிப்ரவரி 2025, 11:47 am IST

குஜராத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு பக்தர்களுடன் சென்றுக்கொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று அதிகாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆன்மிக சுற்றுலாவுக்குச் சென்ற பேருந்து, குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்திலுள்ள பள்ளத்தாக்கில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவுடன் விரைந்த காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து பேசிய காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜி. பாட்டீல், ''48 பக்தர்களுடன் சென்ற சொகுசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை மீறி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் ஓட்டுநர், இரு பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

17 பேர் தீவிர காயங்களுடன் அஹ்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் லேசான காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நிறைவுப் பகுதியை எட்டியுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

குஜராத்தின் துவாரகா பகுதியில் இருந்து பேருந்தில் இரவு புறப்பட்ட பக்தர்கள், மகாராஷ்டிரத்தின் நாசிக் பகுதிக்குச் செல்லத்திட்டமிட்டிருந்தனர். விபத்து நடப்பதற்கு 2.5 கிலோ மீட்டருக்கு முன்பு பேருந்தை நிறுத்தி அனைவரும் தேநீர் அருந்தியுள்ளனர். பேருந்து மீண்டும் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.