கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சிறுபான்மையினரைக் காக்கத் தவறிய மத்திய அரசு: மக்களவையில் கனிமொழி

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு தவறிவிட்டதாக மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

News image

கனிமொழி - திமுக எம்.பி.

Updated On :3 பிப்ரவரி 2025, 10:20 am

DIN

புது தில்லி: நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று நடைபெற்ற விவாதத்தின்போது திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் ஆன்டி இந்தியன் என்கிறார்கள். நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிuத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

மேலும், நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை, மிரட்டப்படுகின்றனர் என்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் வெவ்வேறு மதத்தினர் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், இரும்புக் காலம் குறித்தான கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்கவில்லை. இரும்புக் காலம் பற்றிய தமிழக அரசின் அறிவிப்பு குறித்து மத்திய அரசு இதுவரை மௌனம் காப்பது ஏன்? 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவை மத்திய அரசு ஏற்று அறிவிக்க வேண்டும். உலகிலேயே முதலில் இரும்பை பயன்படுத்தியது தமிழர்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.