எல்லை விவகாரங்களில் ராகுல் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்

எல்லை சார்ந்த விஷயங்களில் ராணுவ தலைமைத் தளபதியின் அறிக்கையை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்.
நாடாளுமன்றத்து வருகை புரிந்த ராஜ்நாத் சிங்
நாடாளுமன்றத்து வருகை புரிந்த ராஜ்நாத் சிங்PTI
Published on
Updated on
1 min read

எல்லை சார்ந்த விஷயங்களில் ராணுவ தலைமைத் தளபதியின் அறிக்கையை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்திக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் செயல்படுவது வருத்தம் அளிப்பதாவும் விமர்சித்துள்ளார்.

இந்தியா - சீனா எல்லை நிலவரத்தில் ராணுவ தளபதி வெளியிட்ட அறிக்கை குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களவையில் ராகுல் காந்தி நேற்று (பிப். 3) கூறியுள்ளார்.

ராணுவ தளபதியின் கருத்துகள் இருபுறமும் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய ரோந்துப் பணிகள் குறித்து மட்டுமே கூறப்பட்டிருந்தது. அண்மைக் காலமாக நீக்கப்பட்டிருந்த இந்த பாரம்பரிய நடைமுறை மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல்கள் நாடாளுமன்றத்திலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

ராணுவ தலைமைத் தளபதி எங்கும் ராகுல் காந்தியை எங்கும் குறிப்பிட்டுப் பேசவில்லை. தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.

சீனா நுழைந்த இந்தியப் பகுதி ஏதேனும் இருந்தால், அது 1962 மோதலின் விளைவாக அக்சாய் சின்னில் 38,000 சதுர கி.மீ. மற்றும் 1963 -ல் பாகிஸ்தான் சீனாவிற்கு சட்டவிரோதமாக விட்டுக்கொடுத்த 5,180 சதுர கி.மீ. ஆகும். நம் வரலாற்றின் இப்பகுதியை ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com