தில்லி பேரவைத் தேர்தல்: 60% வாக்குப் பதிவு- நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை
மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.










