
தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தில்லியில் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் ஆம் ஆத்மி தேர்தலை சந்தித்துள்ளது.
தொடர்ந்து 15 ஆண்டுகளாக தில்லியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், 2015, 2020 சட்டப்பேரவைத் தேர்தல்களில் பின்னடைவுகளைச் சந்தித்தது.
இந்தியா கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் பிரிந்து, தனித்தனியாகப் போட்டியிட்டன.
இது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் பாஜக, தலைநகரான தில்லியைக் கைப்பற்றும் நோக்கத்தில் களமிறங்கியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தில்லி பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. டோக்கன்கள் மூலம் மாலை 6 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தற்போது கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பெரும்பாலும் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக முடிவுகள் வெளியாகியுள்ளதால், ஆட்சி மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
டைம்ஸ் நவ்
பாஜக 37 - 43
ஆம் ஆத்மி 32 - 37
காங்கிரஸ் 0 - 2
என்டி டிவி
பாஜக 51 - 60
ஆம் ஆத்மி 10 - 19
காங்கிரஸ் 0 - 2
சிஎன்என்
பாஜக 40
ஆம் ஆத்மி 30
காங்கிரஸ் 2
மேட்ரிஸ் (Matrize)
பாஜக 35 - 40
ஆம் ஆத்மி 32 - 37
காங்கிரஸ் 0 - 1
ரிபப்ளிக்
பாஜக 35 - 40
ஆம் ஆத்மி 10 - 19
காங்கிரஸ் 0
பி-மார்க்
பாஜக 39 - 49
ஆம் ஆத்மி 39 - 49
காங்கிரஸ் 0 - 1
பீபள்ஸ் பல்ஸ்
பாஜக 51 - 60
ஆம் ஆத்மி 10 - 19
காங்கிரஸ் 0