இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி: எல். முருகன்

தில்லி தேர்தல் வெற்றி பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

News image

மத்திய இணையமைச்சா் எல். முருகன்(கோப்புப்படம்)

Updated On :8 பிப்ரவரி 2025, 12:09 pm IST

தில்லி தேர்தல் வெற்றி பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகளை எண்ணும் பணி இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி இந்திய தேர்தல் ஆணையத் தரவுகளின்படி பாஜக - 48, ஆம் ஆத்மி - 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட முன்னிலையில் இல்லை.

தில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் பாஜகவினர் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பாஜக இணையமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தில்லி சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள, தில்லி மாநில பாரதிய ஜனதா கட்சியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தில்லி மாநில மக்களிடத்தில் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்து, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளார்கள் என்பதற்கும், பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.