
புதன்கிழமை மாகி பூர்ணிமா புனித நீராடல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரயாக்ராஜில் போக்குவரத்துக் காவல்துறையினர் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
கும்பமேளா நடைபெற்று வரும் பகுதியில், வாகனங்கள் அனுமதி இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பிப்ரவரி 11 முதல், கும்பமேளா நடக்கும் பகுதியைச் சுற்றிலும் புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வாகனங்களை அதற்கென இருக்கும் இடத்தில் நிறுத்திவிட்டு நடந்துசெல்லும் வகையில் திட்டமிடப்படுள்ளது.
இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகன நெரிசல் மற்றும் வாகனங்களுக்குள்ளேயே மக்கள் சிக்கிக் கொள்வது என்ற நிலை தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.