ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

News image

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்.

கோப்புப்படம்.

Updated On :15 பிப்ரவரி 2025, 2:12 pm

DIN

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிடைத்த தகவலின்படி மொத்தம் 60 கோடி பேர் மகா கும்பமேளாவில் நீராடியுள்ளனர் என்றார். ஆனால் அரசு அதை மறைக்கிறது. புள்ளி விவரங்களில் பாஜக அரசு பொய் சொல்கிறது. பிரயாக்ராஜில் வசிப்பவர்களால்கூட புனித நீராட முடியவில்லை.

எனவே கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மேலும் இந்நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பங்கேற்று வெவ்வேறு நாள்களில் புனித நீராடினர்.

மெளனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜிற்கு வருகைப் புரிந்தனர். மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

பிப்.26 மகா சிவராத்திரி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் வெள்ளிக்கிழமை மாலை வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.