மொழியை வைத்து பிரிவினை ஏற்படுத்தும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினையை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தொடக்க விழாவில் விளக்கேற்றி தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ்..
தொடக்க விழாவில் விளக்கேற்றி தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ்..
Published on
Updated on
1 min read

மொழியை வைத்து பிரிவினையை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு விழா தில்லியில் நடைபெற்றது. 98-வது அகில இந்திய மராத்தி சாஹித்திய சம்மேளனத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, வீரம், வலிமை, அழகு, உணர்வு மற்றும் சமத்துவம் ஆகியவற்றை முற்றிலுமாக பிரதிபலிக்கும் மொழி மராத்தி என்று கூறினார்.

இதையும் படிக்க... ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

இவ்விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “இந்திய மொழிகளிடையே எந்த விரோதமும் இல்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு மொழியை வளப்படுத்திக்கொண்டு இருக்கிறது.

மொழிகளுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மொழிகளை வளப்படுத்துவது நமது சமூக பொறுப்பு. பழமையான நாகரிகங்களைக் கொண்ட நாடு இந்தியா. இது புதிய திட்டங்களையும் புதிய மாற்றங்களையும் உண்டாக்கியுள்ளது. உலகின் பழமையான மொழி கொண்ட நாடு என்பதற்கு இது சான்றாகும். இந்த மொழி பன்முகத்தன்மை நமது ஒற்றுமைக்கு மிக அடிப்படையான ஒன்றாகும்” என்றார்.

தொடக்க விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், 98-வது அகில இந்திய மராத்தி சம்மேளனத்தின் தலைவரான எழுத்தாளர் தாரா பவால்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க... சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com