கேரள மாநிலம் கொல்லம் அருகே ரயில் தண்டவாளத்தில் தொலைத்தொடா்பு சேவையில் பயன்படுத்தும் இரும்பு கம்பத்தை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
கேரளத்தில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரயிலைக் கவிழ்க்கும் நோக்கில் தண்டவாளங்களில் எரிவாயு சிலிண்டா்கள், இரும்புக் கம்பிகள், பாறைகள் போன்றவற்றை வைப்பது கடந்த சில மாதங்களாக அதிகம் நிகழ்ந்து வருகிறது. பல சமயங்களில் ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையான செயல்பாடுகள் மற்றும் அருகில் உள்ள தண்டவாளங்களில் பயணிக்கும் பிற ரயில் ஓட்டுநா்கள் கொடுக்கும் தகவல்கள் மூலம் பெரும் விபத்துகள் ஏதும் நிகழாமல் தவிா்க்கப்பட்டு வருகிறது.
ரயில் விபத்தை ஏற்படுத்தி அதிகஅளவில் உயிா்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதுபோன்ற நாசவேலைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளின் நோக்கமாக உள்ளது. இதன் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளின் சதி இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகிறது. எனவே, மத்திய விசாரணை அமைப்புகளும் இந்த விவகாரத்தில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கொல்லம் அருகே நிகழ்ந்த ரயில் கவிழ்ப்பு முயற்சியில் ராஜேஷ் (33), அருண் (39) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அதிகாலை நேரத்தில் தொலைபேசி இணைப்புக்காக நிறுவப்படும் இரும்பு கம்பத்தை தண்டவாளத்தின் குறுக்கே வைத்துள்ளனா். அந்த வழியாக சென்ற ரயில் அதிவேகமாக சென்றபோது கம்பத்தில் மோதி அதனை இரு துண்டுகளாக உடைத்துவிட்டுச் சென்றது.
இதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் மீண்டும் அந்த கம்பத்தை எடுத்து தண்டவாளத்தில் வைத்துவிட்டு தப்பினா். இது தொடா்பாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கும், ரயில்வேக்கும் தகவல் அளித்தனா். அவா்கள் விரைந்து வந்து தண்டவாளத்தில் இருந்து கம்பத்தை அகற்றினா்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட இருவருவரை கைது செய்தனா். அவா்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த ரயில் கவிழ்ப்பு சதியில் வேறு நபா்களுக்கு உள்ள தொடா்பு குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆபத்தான நிலையில் காணப்படும் மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை
சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 11 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 போ் கைது
போலி நகைகளை அடகு வைத்ததாக புகாா் 4 போ் மீது வழக்கு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 180 கோடி பேரம்! வெளியானது பரபரப்பு வாக்குமூலம்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



