சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஒடிசா ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி பதவியேற்பு!

ஒடிசாவின் 27-வது ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி பதவியேற்பு பற்றி..

News image
ஹரிபாபு கம்பம்பட்டி
Updated On :3 ஜனவரி 2025, 6:14 am

DIN

ஒடிசாவின் 27-வது ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பாஜக தலைவர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சக்ரதாரி சரண் சிங் கம்பம்பட்டிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கு முன்னதாக ஆளுநராக இருந்த ரகுபர் தாஸ் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து ஹரிபாபு கம்பம்பட்டி இன்று பதவியேற்றார்.

ஹரிபாபு கம்பம்பட்டி ஆளுநராக பதவியேற்க வியாழக்கிழமை மதியம் ஒடிசா வந்தார். விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்று, மாநிலம் மற்றும் மக்களின் நலனுக்காக வழிபாடு மேற்கொண்டார்.

மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த கம்பம்பட்டி, ஒடிசாவின் ஆளுநராக கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.