இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பா? பொது சுகாதார இயக்குநரகம் விளக்கம்!

இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பா? எனப் பொது சுகாதார இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது.
வைரஸ் தொற்று
வைரஸ் தொற்று
Published on
Updated on
1 min read

இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பா? எனப் பொது சுகாதார இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை, சாதாரண சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இல்லை என்றும் வைரஸ் பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்எம்பிவி அல்லது மெடாநியுமோ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

நுரையீரல் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதாகவும் சீனாவின் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்எம்பிவி எனப்படும் ஹியூமன் மெடாநியூமோவைரஸ் பாதிப்பே இந்த நிலைக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.ஆனால், இதுவரை அவசரநிலையாக சீன சுகாதாரத் துறையாலோ அல்லது உலக சுகாதார அமைப்பாலோ அறிவிக்கப்படவில்லை.

இதுபற்றி பொது சுகாதார இயக்குநர் ஜெனரல் அதுல் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீனாவில் எச்எம்பிவி வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது என்று செய்திகள் வந்துள்ளன. நாங்கள் அப்படி நினைக்கவில்லை.

நான் தெளிவாகச் சொல்கிறேன். இது சுவாச வைரஸ் போன்றது. இந்த வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை பெரும்பாலும் பெரியவர்களுக்கும் 1 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும் ஏற்படுத்துகிறது.

குளிர்காலத்தில் சுவாசக் கோளாறுகள் பொதுவானவை. அவற்றைச் சமாளிக்க இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன. மருந்துகள் தேவையில்லை, ஏனெனில் இதற்கு எதிராக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் எதுவும் இல்லை.

மருத்துவமனைகளிலோ அல்லது இந்திய மருத்துவ ஆய்வு மையத்தின் தரவுகளின்படியோ பெரிய நோய்ப் பாதிப்புகள் எதுவும் இல்லை. இதைப் பற்றி பயப்பட ஒன்றுமில்லை. குளிர் காற்று மற்றும் காற்றின் மோசமான தரக் குறியீட்டின் காரணமாக, குளிர்காலக் காலங்களில் சுவாச நோய்கள் குறித்த கவலைகள் பொதுவாகவே ஏற்படுகின்றன” என்றார்.

சில சுவாச நோய்கள் குளிர்காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நிமோனியாவைக் கண்காணிக்கும் அமைப்பை அமைப்பதாக சீன நோய் கட்டுப்பாட்டு ஆணையம் டிசம்பரில் அறிவித்தது.

இந்த அமைப்பில் சீனாவின் நடவடிக்கையாக 5 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கரோனா தோற்று பாதுகாப்பு நடவடிக்கைகளைவிட சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com