இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோழிகளுக்கு மூச்சுக்குழல் சுவாச நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

மூச்சுக்குழல் சுவாச நோய் பாதிப்பு கோழிகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:31 pm

Syndication

நாமக்கல்: மூச்சுக்குழல் சுவாச நோய் பாதிப்பு கோழிகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தவரை,

பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6 மற்றும் 69.8 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும். மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 93.2-க்கு மிகாமலும், இரவு வெப்பம் 68 டிகிரியாகவும் காணப்படும். வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 4 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலான கோழிகள் ஈக்கோலை மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழல் சுவாச நோய் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, கோழி பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளிக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தண்ணீரில் கிருமிநாசினி தெளித்தல், கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் உயிா் பாதுகாப்பு முறைகளை பண்ணையாளா்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.