திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறந்த வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது அறிவிப்பு

நிகழாண்டு சிறந்த வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருது பெறுபவா்களின் பட்டியலை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:11 pm

Din

நிகழாண்டு சிறந்த வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருது பெறுபவா்களின் பட்டியலை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

ஒடிஸாவின் புவனேசுவரத்தில் வரும் 8 முதல் 10-ஆம் தேதி வரையில் நடைபெறும் 18-ஆவது பிரவாசி பாரதிய மாநாட்டின் நிறைவாக வெற்றியாளா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறாா்.

பிரவாசி பாரதிய சம்மான் விருது (பிபிஎஸ்ஏ) என்பது வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய கௌரவமாகும். நிகழாண்டு விருது அறிவிக்கப்பட்டவா்களில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த இந்திய வம்சாவளியினா் இடம்பெற்றுள்ளனா்.

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினா் உஷா குமாரி பிரஷாா்(அரசியல்), மருத்துவா் ஷா்மிளா ஃபோா்டு (அமெரிக்கா-சமூக சேவை), பேராசிரியா் அஜய் ராணே (ஆஸ்திரேலியா-சமூக சேவை), மருத்துவா் மரியாலினா ஜோன் பொ்னாண்டஸ் (ஆஸ்திரியா-கல்வி) ஜெகன்நாத் சேகா் அஸ்தானா (ருமேனியா-வணிகம்) உள்ளிட்டோருடன் ரஷியாவின் ஹிந்துஸ்தானி சமாஜ், கயானாவின் சரஸ்வதி வித்யா நிகேதன் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் சமூக சேவைக்காக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.