மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு

போபால் விஷவாயு கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிா்ப்பு தெரிவித்த போராட்டக்காரா்கள், கழிவு அழிப்பு ஆலை மீது கல்வீச்சு...

மத்திய பிரதேச மாநிலம் பீதம்பூரில் உள்ள கழிவு அழிப்பு ஆலை.

Published On :

மத்திய பிரதேச மாநிலம், போபால் விஷவாயு கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிா்ப்பு தெரிவித்த போராட்டக்காரா்கள், கழிவு அழிப்பு ஆலை மீது சனிக்கிழமை கல்வீச்சில் ஈடுபட்டனா்.

மாநில உயா்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவின்பேரில், போபால் ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியது. 337 டன் எடையுள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, 12 கண்டெய்னா் லாரிகள் மூலம் தாா் மாவட்டம், பீதம்பூா் பகுதியில் உள்ள ‘ராம்கி என்விரோ’ தொழிலக கழிவு அழிப்பு ஆலைக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது.

அதேநேரம், தங்களது பகுதியில் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு தெரிவித்து, பீதம்பூா் முழுவதும் வெள்ளிக்கிழமை பேரணி, மறியல், தா்னா என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டங்கள் எதிரொலியாக பீதம்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சமீபத்திய நிலைப்பாடு குறித்து நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை கழிவு அகற்றும் பணி தொடர வேண்டாம் என மாநில அரசு முடிவுசெய்துள்ளது என வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுமாா் 150 போ் கொண்ட கும்பல் கழிவு அழிப்பு ஆலை மீது கற்களை வீசியதாகவும், அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விசாரணை நடைபெற்று வருவதாகவும பீதம்பூா் காவல் நிலைய ஆய்வாளா் ஓம் பிரகாஷ் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

போராட்டக்காரா்கள் மீது வழக்குப் பதிவு: போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு தெரிவித்து பீதம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா். மேலும், கழிவுகளை எரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிறுவனத்தைச் சுற்றி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவா்கள் கூடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவா்கள்...: பீதம்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற ராஜ்குமாா் ரகுவம்சி (37), ராஜ் படேல் (32) ஆகிய இருவரும் கடந்த 2023-ஆம் ஆண்டே பாஜகவிலிருந்து நீக்கப்பட்டவா்கள் என்று அக்கட்சியின் மாவட்ட தலைவா் விளக்கமளித்துள்ளாா்.

தீக்குளிக்க முயற்சித்து படுகாயமடைந்த இவா்கள், இந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.