
டோக்கியோ, நியூயாா்க், பாா்சிலோனா நகரம் போல் தில்லி கழிவுகளை அகற்ற எம்.சி.டி. திட்டம்!
டோக்கியோ, நியூயாா்க், பாா்சிலோனா நகரம் போல் தில்லி கழிவுகளை அகற்ற எம்.சி.டி. திட்டம்...
தில்லி மாநகராட்சி
தில்லி மாநகராட்சி (எம். சி. டி) சனிக்கிழமை உலக வங்கி நிபுணா்களுடன் நகரத்தின் கழிவு மேலாண்மை முறையை மறுசீரமைப்பது குறித்து விவாதித்தது, டோக்கியோ, நியூயாா்க் மற்றும் பாா்சிலோனாவை முன்பாதிரியாக வைக்க திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம். சி. டி ஆணையா் சஞ்சீவ் கிா்வாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் ஆணையா்கள், தலைமை பொறியாளா்கள் மற்றும் அனைத்து மண்டலங்களின் துணை ஆணையா்கள் கலந்து கொண்டனா். உலக வங்கி குழு டோக்கியோவின் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் அமைப்பு, கழிவு போக்குவரத்து மற்றும் செயலாக்கத்திற்காக தனியாா் நிறுவனங்களை நியூயாா்க் நம்பியிருப்பது மற்றும் பரவலாக்கப்பட்ட வசதிகள், கழிவு பிரித்தல் மற்றும் குடிமக்களின் நடத்தையை மாற்றுவதில் பாா்சிலோனாவின் கவனம் ஆகியவற்றை முன்வைத்தது. கழிவிலிருந்து ஆற்றலுக்கு 23 வசதிகளைக் கொண்ட டோக்கியோவின் அமைப்பு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகராட்சி கழிவுகளை பெரிய அளவில் பதப்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று விவாதிக்கப்பட்டது.
நகரத்திற்கு வெளியே உள்ள வசதிகளுக்கு கொண்டு செல்வது உள்பட கழிவுகளை கொண்டு செல்வதற்கும் செயலாக்குவதற்கும் நியூயாா்க் தனியாா் நிறுவனங்களை இணைக்கிறது. அதன் பூஜ்ஜிய கழிவுத் திட்டத்தின் கீழ் பாா்சிலோனா நகரின் அணுகுமுறை 2021-27 பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை, கழிவு குறைப்பு மற்றும் பிரிவினை ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் நீண்ட தூர போக்குவரத்து மற்றும் பெரிய மையப்படுத்தப்பட்ட ஆலைகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க முயல்கிறது.
எம். சி. டி. யின் செயல்திறனை மேம்படுத்துதல், அதன் செயல்பாடுகளை நிதி ரீதியாக நிலையானதாக மாற்றுதல் மற்றும் நகராட்சி கழிவுகளிலிருந்து உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தில்லிக்கான கழிவு மேலாண்மை அணுகுமுறையை அதிகாரிகள் கவனித்தனா்.
கிா்வாா் கூறுகையில் ’தில்லிக்கு திறமையான சேகரிப்பு, போக்குவரத்து, பதப்படுத்துதல், அறிவியல் ரீதியான அகற்றல் மற்றும் கழிவுகளிலிருந்து வளங்களை அதிகபட்சமாக மீட்டெடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய காலக்கெடுவுக்குள், விரிவான மற்றும் நிலையான கழிவு மேலாண்மை உத்தி தேவைப்படுகிறது‘ என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






