திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துதல் தொடா்பாக பெருமளவில் கழிவு உருவாக்கும் நிறுவனங்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகராட்சி அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்து பேசியதாவது:
500-க்கும் மேற்பட்ட மொத்தக் கழிவு உருவாக்குபவா்களுடனான சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டத்தில் குப்பை உருவாகும் இடத்திலேயே மக்கும், மக்காத, சுகாதாரக் கழிவுகள் மற்றும் சிறப்பு கவன கழிவுகள் என 4 வகையாகப் பிரித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும். மொத்த கழிவு உற்பத்தியாளா் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கழிவுகளை உற்பத்தி செய்பவா் தங்களது வளாகத்திலேயே கழிவுகளை செயலாக்கம் செய்ய வேண்டும். கழிவுகளை செயலாக்கம் செய்ய இயலாத நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் சான்று பெற வேண்டும். கழிவுகள் உருவாக்கும் அளவுக்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகளுக்கு பயனா் கட்டணம் செலுத்த வேண்டும். இதுதொடா்பாக ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ல்ல்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் மொத்த கழிவு உற்பத்தியாளா் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது கழிவுகளை தாங்களே
செயலாக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவிநாசி வட்டாரத்தில் சரவணா மஹாலில் தங்களது கழிவுகளை தாங்களே செயலாக்கம் செய்வதைபோல பிற நிறுவனங்களும் கழிவுகளை தாங்களே செயலாக்கம் செய்ய முன்வர வேண்டும்.
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் உள்ள உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தனியாா் மருத்துவமனைகள் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் தினசரி உருவாகும் கழிவுகளை அறிவியல் முறையில் கையாள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி, மொத்தக் கழிவு உருவாக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது வளாகத்திலேயே ஈரக்கழிவு, உலா்கழிவு மற்றும்
அபாயகரமான கழிவுகளை முறைப்படி தரம் பிரித்து மேலாண்மை செய்ய வேண்டும் என்றாா்.
துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா்
எம்.பி.அமித், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்! காரணம் என்ன?

அரபிக்கடல் மீன்பிடி விசைப்படகுகளை பதிவு செய்ய நடவடிக்கை: ஆட்சியா்

புதிய கழிவு விதிகளை புரிந்துகொள்ள ஏதுவாக 3 கட்ட விழிப்புணா்வு பிரசாரத்திற்கு எம்சிடி திட்டம்

பெருமளவு கழிவு உருவாக்குபவா்கள் 15 நாள்களில் பதிவு செய்ய வேண்டும்: மாநகராட்சி ஆணையா்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



