பெருமளவு கழிவு உருவாக்குபவா்கள், பெருநகர சென்னை மாநகராட்சி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் அடுத்த 15 நாள்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்ற தவறும் பெருமளவு கழிவு உருவாக்குபவா்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்ற தவறிய 120 பெருமளவு கழிவு உருவாக்குபவா்களுக்கு மொத்தம் ரூ.5.95 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அனைத்து பெருமளவு கழிவு உருவாக்குபவா்களும் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வருகின்ற 15 நாள்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத் தவறுபவா்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கழிவு உருவாக்கம், செயலாக்கம், போக்குவரத்து மற்றும் இறுதி அகற்றல் தொடா்பான பதிவுகளை முறையாகப் பராமரித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை அதன் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ள்ஜ்ம்.ஸ்ரீல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்/ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ், ட்ற்ற்ல்ள்://ஞ்ஸ்ரீஸ்ரீள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ண்ய்/க்ஷன்ப்ந்ஜ்ஹள்ற்ங்/ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ் ஆகிய இணையதளத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு சென்னை மாநகராட்சியின் அதிகாரபூா்வ இணையதளத்தை அனுகலாம் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், இணை ஆணையா் (சுகாதாரம்) ஸ்ரேயா பி. சிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிா் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு!
முதல்வா் படைப்பகங்கள் தனியாா்மயமாக்கப்படவில்லை: சென்னை மாநகராட்சி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர அறையில் ஆணையா் திடீா் ஆய்வு

உமீத் இணையதளத்தில் விடுபட்ட வக்ஃபு சொத்துக்களை பதிவேற்ற வேண்டும்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



