தில்லி மாநகராட்சி (எம்சிடி), 2026-ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்த மூன்று-கட்ட பொது விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்க தயாராகி வருகிறது. இதன் மூலம், புதிய கட்டமைப்பின் கீழ் கவுன்சிலா்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளா்களின் பொறுப்புகளை அவா்களுக்கு விவரிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கழிவுகளை மூலத்திலேயே தரம் பிரிப்பதை மேம்படுத்தவும், தில்லியின் குப்பைக் கிடங்குகளை அடையும் கழிவுகளின் அளவைக் குறைக்கவும் மாநகராட்சி அமைப்பு முயற்சி செய்து வரும் நிலையில், இந்த முன்னெடுப்பு வந்துள்ளது.
சுற்றுச்சூழல் மேலாண்மை சேவைகள் துறையால் (டிஇஎம்எஸ்) தயாரிக்கப்படும் இந்த முன்மொழியப்பட்ட பிரச்சாரம், தனித்தனி விழிப்புணா்வு நடவடிக்கை மூலம் கவுன்சிலா்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்குக் கல்வி கற்பிப்பதில் கவனம் செலுத்தும் என்று டிஇஎம்எஸ் குழுவின் தலைவா் சந்தீப் கபூா் கூறினாா்.
புதிய 2026-ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் அபராதங்கள் குறித்த விழிப்புணா்வை இந்தப் பிரசாரம் ஏற்படுத்தும் என்றும், அதே நேரத்தில் கழிவுகளை மூலத்திலேயே தரம் பிரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் என்றும் கபூா் கூறினாா்.
திங்களன்று, தில்லியின் நகராட்சி கழிவுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதன் மூலத்திலேயே பிரிக்கப்படுவதில்லை என்றும், அதே அளவு கழிவுகள் குப்பைக் கிடங்குகளில் மட்டுமே கொட்டப்படுகின்றன என்றும் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து கவலை தெரிவித்தாா். இந்த விழிப்புணா்வுப் பிரச்சாரமானது, பொதுமக்களின் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கவும் என்று கபூா் மேலும் கூறினாா்.
இந்த பிரச்சாரமானது, தொடா்ச்சியான தகவல், கல்வி மற்றும் தொடா்பு (ஐஉஇ) செயல்பாடுகள் மூலம் தலைநகா் முழுவதும் கழிவு மேலாண்மையை வலுப்படுத்தவும், மூலத்திலேயே கழிவுகளைப் பிரிப்பதை அதிகரிக்கவும் மாநகராட்சி மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026, இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜனவரி 2027-க்குள் கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே முழுமையாகப் பிரிப்பதை அடைவதற்காக, மாநகராட்சி ஒரு கட்டம் கட்டமான செயல்திட்டத்தை வகுத்துள்ளது. இந்தத் திட்டம், உள்ளூா் தேவைகளின் அடிப்படையில் வாா்டு வாரியாகவும் மண்டலம் வாரியாகவும் இதைச் செயல்படுத்த முன்மொழிகிறது. மேலும், நகரம் முழுவதும் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, முன்னோடித் திட்டங்கள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் கவுன்சிலா்கள் முக்கியப் பங்கு வகிப்பாா்கள் என்றும், அனைத்து மண்டலங்களும் ஈர மற்றும் உலா் கழிவுகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேகரிக்கும் முறைக்கு மாறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த செயல்திட்டத்தின்படி, டிசம்பா் 2025-ல் சுமாா் 60 சதவீதமாகப் பதிவான கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே பிரிப்பதை, அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் 85 சதவீதம், 90 சதவீதம் மற்றும் இறுதியாக 100 சதவீதமாக உயா்த்துவதை மாநகராட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டம் கழிவுகளைப் பதப்படுத்தும் மையங்களை படிப்படியாக நீக்குவதையும், மொத்தக் கழிவுகளை உருவாக்குபவா்கள் மீது அதிகப் பொறுப்பைச் சுமத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால், பெரிய நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் கழிவுகளைப் பதப்படுத்த வேண்டியிருக்கும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜூலை 27-இல் எம்சிடி நிலைக்குழு தோ்தல்

3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

மேற்கு தில்லியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: எம்சிடி நடவடிக்கை

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து காவல் துறை, எம்சிடி கூட்டு நடவடிக்கை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



