நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பறவைக் காய்ச்சல் பாதிப்பு: பலியான சிறுத்தை, புலிகள்!

நாக்பூரில் பறவைக் காய்ச்சல் பாதித்து 3 புலிகளும், 1 சிறுத்தையும் பலியாகின.

News image

புலிகள் (கோப்புப் படம்)

Updated On :5 ஜனவரி 2025, 10:48 am

DIN

மகாராஷ்டிரத்தின் நாக்பூர் நகரில் உள்ள கோரேவாடா விலங்குகள் மீட்பு மையத்தில் 3 புலிகளும் ஒரு சிறுத்தையும் பறவைக் காய்ச்சல் பாதிப்பில் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு விலங்குகள் அடிக்கடி சென்று தாக்குதலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சந்திரபூர் வனப்பகுதியில் இருந்து கோரேவாடா பகுதிக்கு பல விலங்குகள் மாற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கடந்த டிச. 20 அன்று ஒரு புலியும், டிச. 23 அன்று 2 புலிகளும் 1 சிறுத்தையும் பலியாகின. அவற்றின் உடற்கூறு மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய விலங்குகள் நோய் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஜனவரி 1 அன்று வெளியான ஆய்வின் முடிவில் ஹெச்5என்1 வைரஸ் தாக்கி பறவைக் காய்ச்சலால் விலங்குகள் பாதிக்கப்பட்டு பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதில், நோய் பாதிப்பின் காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, கோரேவாடா விலங்குகள் மீட்பு மையத்தில் உள்ள விலங்குகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் 26 சிறுத்தைகளும், 12 புலிகளும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இறைச்சி உண்ணும் விலங்குகள் சில எதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்ட விலங்குகளை உண்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என விலங்குகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.