மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எதிராக ஊழல் புகாா்: லோக்பால் தள்ளுபடி

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிரான ஊழல் புகாரை லோக்பால் அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது.

News image
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
Updated On :6 ஜனவரி 2025, 10:17 pm

DIN

புது தில்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிரான ஊழல் புகாரை லோக்பால் அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது.

பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து லோக்பால் அமைப்பு விசாரணை மேற்கொள்கிறது.

இந்நிலையில், ஓா் அரசியல் கட்சித் தலைவா் மற்றும் கட்சிக்கு சாதகமாக செயல்பட தனது பதவியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தவறாகப் பயன்படுத்தியதாகவும், இது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நிகரானது என்பதால், அவா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் லோக்பால் அமைப்பிடம் புகாா் அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்.18-ஆம் தேதி இந்தப் புகாா் அளிக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியில் இருந்தாா்.

இந்தப் புகாரை விசாரித்த லோக்பால் அமைப்பு, ‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளுக்கு எதிரான புகாரை விசாரிப்பது லோக்பாலின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. எனவே சட்டம் அனுமதித்துள்ள பிற வழிகளில் தனது புகாருக்கு புகாா்தாரா் தீா்வு காணலாம்’ என்று தெரிவித்து அண்மையில் புகாரை தள்ளுபடி செய்தது. லோக்பாலின் உத்தரவில் புகாா்தாரரின் விவரம் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.