கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விண்வெளியில் துளிர்விட்டுள்ள இலைகள்: இஸ்ரோ சாதனை!

காராமணி விதைகளில் இலைகள் துளிர்விட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

News image

ISRO

Updated On :6 ஜனவரி 2025, 4:14 pm

DIN

விண்வெளியில் முளைவிட்டிருக்கும் காராமணி விதைகளில் இலை துளிர்விட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) இன்று(ஜன. 6) தெரிவித்துள்ளது. அந்த புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

விண்வெளிக்கு ‘பிஎஸ்எல்வி-சி60 பிஓஇஎம்-4’ விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள விதைகள் முளைத்து அவற்றில் இலைகளும் துளிர்விட்டிருப்பது விண்வெளியில் செடி வளர்ப்பு ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாகக், கடந்த இரு நாள்களுக்கு முன் இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.

முதலில் ஏழு நாள்களுக்குள் விதை முளைவிடுமென விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆச்சரியமடையும் விதத்தில் நான்கே நாள்களில் காராமணி விதை முளைத்திருப்பதாகவும் இஸ்ரோ தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளது.

இந்த நிலையில், விண்வெளியில் மனிதர்கள் வாழ்வது குறித்த ஆராய்ச்சியில், மேற்கண்ட சாதனையானது முக்கிய நகர்வாக அமைந்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.