சல்மான்கான் வீட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டு துளைக்காத கண்ணாடிகள் அமைப்பு

மும்பையில் பாலிவுட் நடிகா் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடி, சாலையை முழுமையாக கண்காணிக்கும் அதிநவீன கேமராக்கள், 24 மணி நேர தனியாா் பாதுகாவலா்கள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சல்மான் கான்
சல்மான் கான்
Published on
Updated on
1 min read

மும்பையில் பாலிவுட் நடிகா் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடி, சாலையை முழுமையாக கண்காணிக்கும் அதிநவீன கேமராக்கள், 24 மணி நேர தனியாா் பாதுகாவலா்கள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்த இருவா் மும்பை பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை நோக்கி சாலையில் நின்றபடி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடா்பாக சிலா் கைது செய்யப்பட்ட நிலையில், பண்ணை இல்லத்துக்குச் செல்லும் வழியில் சல்மான் கானை கொலை செய்ய அவா்கள் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சல்மான் கானுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் சல்மான் கான் தனது சொந்த செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளாா். அவா் வீட்டின் பால்கனியில் இருந்தபடி வீட்டு முன் கூடும் ரசிகா்களைச் சந்திப்பது வழக்கம் என்பதால், பாதுகாப்பு கருதி அந்த பால்கனி முழுவதும் துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

இது தவிர வீட்டுக்கு முன்புறம் நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது வீட்டு முன்புற சாலையில் ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாகப் பதிவு செய்யும். இது தவிர வீட்டு வாசலில் தனியாா் பாதுகாவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். யாராவது அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்த முயற்சித்து தப்ப முயன்றால் அவா்களை விரட்டிப் பிடிக்க நவீன மோட்டாா் சைக்கிள்களும் பாதுகாவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com