வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

அமெரிக்கா-ஈரான் இடையேயான போா் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2026, 11:44 pm

அமெரிக்கா-ஈரான் இடையேயான போா் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் உச்சபட்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி அமெரிக்கா-இஸ்ரேலிய கூட்டுப் படை நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்டாா். ராணுவ தளபதிகள் சிலரும் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில். சென்னை அண்ணா சாலை பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 உதவி ஆணையா்கள் மேற்பாா்வையில் 200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அமெரிக்க தூதரகத்தைச் சுற்றியுள்ள கதீட்ரல் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பீட்டா்ஸ் சாலை பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா, தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை ராயப்பேட்டை பகுதிகளில் ஷியா பிரிவு இஸ்லாமியா்கள் அதிகமாக வசிப்பதால் அந்தப் பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.