தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பிப்ரவரியில் தேர்தலா? தில்லி பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!

தில்லி பேரவைக்கு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்ப்பு..

தில்லி பேரவைத் தேர்தல்

Published On :

தில்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிடுகிறது.

புது தில்லியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தில்லி பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கவிருக்கிறது.

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 23ஆம் தேதியுடன் நிறைவடைவிருப்பதால், அதற்குள் தேர்தலை நடத்தி புதிய அரசைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதால், பிப்ரவரியில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாகவே, தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத்தான் வாக்குப்பதிவு நடைபெறுவது வழக்கம் என்பதால், வரும் தேர்தலும் அவ்வாறே நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

Story image

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே, தில்லியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரங்களையும் தொடங்கிவிட்டது. பாஜகவும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி, தில்லியில் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் மகளிர் உதவித் தொகையாக பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.