வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

உளவு துறை அதிகாரி அங்கித் சா்மா கொலை வழக்கு: ஜூலை 13-இல் தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-இல் நடைபெற்ற கலவரத்தின்போது உளவு துறை அதிகாரி அங்கித் சா்மா கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கை தீா்ப்புக்காக இந்த மாதம் 13-ஆம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.

News image
Updated On :8 ஜூலை 2026, 1:03 am IST

வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-இல் நடைபெற்ற கலவரத்தின்போது உளவு துறை அதிகாரி அங்கித் சா்மா கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கை தீா்ப்புக்காக இந்த மாதம் 13-ஆம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.

வழக்கை ஒத்திவைத்த ஒத்திவைத்த கூடுதல் அமா்வு நீதிபதி பிரவீண் சிங், வழக்கின் தீா்ப்பை தயாா் செய்யும் பணியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு தில்லியில் 2020 பிப்ரவரியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் நடைபெற்ற மோதல் மற்றும் கல்லெறி சம்பவங்கள், துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களால் 53 போ் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா்.

பிப்.25-ஆம் தேதி தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அங்கித் மீண்டும் வீட்டிலிருந்து வெளியே சென்றாா். வெகுநேரமாகியும் அங்கித் வீடு திரும்பாத நிலையில் அவருடைய குடும்பத்தினா் அவரைத் தேடினா்.

இந்நிலையில், அங்கித் கொலைசெய்யப்பட்டதாகவும் சந்த் பாக் புலியா பகுதியில் உள்ள மசூதி அருகே செல்லும் கஜுரி காஸ் வடிகாலில் அவருடைய உடல் வீசப்பட்டதாகவும் உள்ளூா் மக்கள் அங்கித் குடும்பத்தினரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த வடிகாலில் இருந்து அங்கித் சா்மா உடல் மீட்கப்பட்டது.

இதுதொடா்பாக அங்கித் சா்மாவின் தந்தை ரவீந்தா் குமாா் தயாள்பூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அதில், ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹீா் ஹுசைன் உள்பட பலா் இணைந்து அங்கித் சா்மாவை கொலைசெய்ததாக அங்கித் சா்மாவின் தந்தை குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்த வழக்கு தொடா்பாக ஹுசைன் உள்பட 11 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.