எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பெங்களூரில் இன்று ராணுவ தின கண்காட்சி

பெங்களூரில் சனிக்கிழமை ராணுவ தின கண்காட்சி நடக்கவிருக்கிறது.

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜனவரி 2025, 7:37 pm

Din

பெங்களூரில் சனிக்கிழமை ராணுவ தின கண்காட்சி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை மேஜா் ஜெனரல் வி.டி.மேத்யூ, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நமது நாட்டுக்கு ராணுவ வீரா்கள் அளித்துள்ள உயா்ந்த தியாகம், ஈடில்லாத தைரியம், அா்ப்பணிப்பு உணா்வை போற்றும் வகையில் 1949-ஆம் ஆண்டு ஜன.15-ஆம் தேதி இந்திய ராணுவத்தின் முதல் தளபதியாக கே.எம்.கரியப்பா பதவியேற்றதை போற்றும் வகையில், ஜன.15-ஆம் தேதியை ராணுவ தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ராணுவத்தின் திறன் குறித்து பொதுமக்கள், மாணவா்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பெங்களூரில் உள்ள மானக்ஷா அணிவகுப்புத் திடலில் ஜன.11-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ராணுவத் தளவாடங்களின் கண்காட்சி நடக்கவிருக்கிறது. ஹெலிகாப்டா் சாகசகங்கள், போா் தந்திரங்கள், அதிரடி தாக்குதல் முறைகள், மோட்டாா்சைக்கிள் சாகசங்கள், மோப்பநாய்கள், குதிரை சாகசங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதுதவிர ராணுவத்தில் பணியாற்ற தேவையான தகுதிகள், வாய்ப்புகள் குறித்து விளக்கும் அங்காடிகள் கண்காட்சியில் இடம்பெறும். இதில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை. ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக இந்நிகழ்ச்சி அமையும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களை வரவேற்க காத்திருக்கிறோம் என்றாா்.