அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தலையில் பலத்த காயங்களுடன் பெட்டிக்குள் இருந்த 3 பெண் குழந்தை சடலங்கள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

News image
Updated On :10 ஜனவரி 2025, 8:03 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மீரட்டில் 5 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் புதன்கிழமையில் இருந்து காணாமல் போனதாக அண்டை வீட்டார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காணாமல் போயிருந்த குடும்பத்தினரின் பூட்டியிருந்த வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்தனர். உள்ளே சென்றதும், காணாமல் போயிருந்தவர்கள் வீட்டின் தரையில் சடலங்களாகக் கிடப்பது தெரிய வந்தது.

வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டு, சிதறிக் கிடந்ததுடன், தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்களின் 3 பெண் குழந்தைகளும் பெட்டிக்குள் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். 3 குழந்தைகளும் 10 வயதிற்குள்பட்டவர்களே.

மேலும், உயிரிழந்து கிடந்த 5 பேரின் தலையிலும் காயம் இருப்பது தெரிய வந்தது. தலையில் பலமாக தாக்கியதால், அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம், தனிப்பட்ட பகையின் காரணமாக நடத்தப்பட்ட கொலை சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், உடற்கூறாய்வுக்காக 5 பேரின் உடல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அறிக்கை வெளிவந்தவுடன்தான், உண்மை தெரிய வரும் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.