கோப்புப் படம்
கோப்புப் படம்

கோகல்புரி காவல் நிலையத்தில் தீ விபத்து

தில்லியில் உள்ள கோகல்புரி காவல் நிலையத்தின் 4-ஆவது மாடியில் உள்ள ஒரு அறையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து
Published on

தில்லியில் உள்ள கோகல்புரி காவல் நிலையத்தின் 4-ஆவது மாடியில் உள்ள ஒரு அறையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் அலுவலக உபகரணங்கள் சேதமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்தச் சம்பவம் குறித்து மதியம் 1.20 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

தீ விபத்து ஏற்பட்ட அறையில் எல்இடி பேனல்கள், கணினி அமைப்புகள் மற்றும் தளபாடங்கள் சேதமடைந்தன. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வயரிங்கில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com