ராகுல் காந்தி மீது 2018 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கு ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கர்நாடகத்தில் 2018 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக நிர்வாகி மீதான ஆட்சேபகரமான கருத்துகளைக் தெரிவித்தாகக் கூறி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது பாஜகவைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா 2018 ஆம் ஆண்டில் புகார் அளித்தார். இன்று வரையில் நீடிக்கும் இந்த வழக்கில் ஒரு பகுதியாக, ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 2023 ஆம் ஆண்டில் டிசம்பரில் உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார்; தொடர்ந்து, ஜூலை மாதத்தில் ராகுல் மீது அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ. 50,000 மதிப்பிலான இரண்டு பத்திரங்கள் மூலம் ராகுலுக்கு சிறப்பு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
இதையும் படிக்க: பாலாவின் எழுச்சியா? வீழ்ச்சியா? வணங்கான் - திரை விமர்சனம்
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானபோது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்குடையவை என்று கூறப்பட்டதால், குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு புகார்தாரருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி இல்லாததால், டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த விசாரணையும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், குறுக்கு விசாரணையை முடிக்காததால், கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திட்டமிடப்பட்ட விசாரணையும் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, வழக்குரைஞர்களின் போராட்டத்தால் ராகுல் காந்தி மீதான வழக்கு ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப். 18ல் தமிழகத்தில் 3 இடங்களில் ராகுல் பிரசாரம்?

தேர்தல் பிரசாரம்: ஏப். 6-ல் புதுவை வரும் ராகுல் காந்தி!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

ராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


