தில்லியில் முதல் பிரசாரம்.. ராகுல் பங்கேற்பு!

வடகிழக்கு தில்லியின் சீலம்பூரில் நடைபெறும் பிரசாரம் பற்றி..
தில்லி பிரசாரத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு
தில்லி பிரசாரத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு
Published on
Updated on
1 min read

தில்லி தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13-ல் வடகிழக்கு தில்லியின் சீலம்பூரில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்துகொண்டு பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளதாக அக்கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொறுப்பாளர் காஜி நிஜாமுதீன் கூறுகையில்,

நாட்டு மக்களின் குரலாக ராகுல்காந்தி மாறியுள்ளார். எங்கு எந்தப் பிரச்னை நடைபெற்றாலும், அங்கு ராகுல் குரல் எழுப்புவார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு வடகிழக்கு தில்லியின் சீலம்பூர் பகுதியில் 'ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதன்' என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதில் ஏராளமான மக்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தலைவர்கள் பங்கேற்பார்கள்.

தில்லியில் ராகுல் காந்தியின் முதல் பேரணி இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தலைநகரில் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார், அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் கட்சியின் அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுடன் இணைவதற்கும் கட்சித் தொண்டர்களின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் கடந்த நவம்பரில் காங்கிரஸ் ஒரு மாத கால தில்லி நியாய யாத்திரையை நடத்தியது.

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி பேரவைக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும்.

முன்னதாக 2015 மற்றும் 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஆம் ஆத்மி முறையே 67 மற்றும் 62 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com