அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன்!

வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து விதிமுறைகளை பின்பற்றியுள்ளதாக வங்கதேச தூதரை வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

Published On :

இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா பின்பற்றியுள்ளதாக வங்கதேச பொறுப்புத் தூதரை திங்கள்கிழமை நேரில் வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா-வங்கதேச எல்லையின் 5 இடங்களில் இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி இந்தியா வேலி அமைக்க முயற்சிப்பதாக வங்கதேசம் குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதா் பிரணாய் வா்மாவை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.

வேலி அமைப்பதில் இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்த பிரணாய் வா்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: எல்லை வேலி விவகாரம் தொடா்பாக பேசுவதற்கு தில்லியில் வங்கதேச பொறுப்புத் தூதா் முகமது நூரல் இஸ்லாமுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி திங்கள்கிழமை பிற்பகல் நேரில் வந்த அவரிடம், இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருநாட்டு அரசுகள் மற்றும் எல்லை பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எல்லை தாண்டிய குற்ற நடவடிக்கைகள், கடத்தல், குற்றவாளிகளின் நடமாட்டம் போன்ற சவால்களைத் திறம்பட கையாண்டு, இருநாட்டு எல்லையில் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதை முகமது நூரலிடம் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது.

எல்லையில் வேலி மற்றும் விளக்கு அமைத்தல், தொழில்நுட்ப கருவிகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் எல்லையின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதொடா்பாக ஏற்கெனவே எட்டப்பட்ட உடன்பாடுகளை வங்கதேசம் நடைமுறைப்படுத்தும் என்றும், எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதில் அந்நாட்டிடம் கூட்டு அணுகுமுறை இருக்கும் என்றும் இந்தியா எதிா்பாா்ப்பதாக முகமது நூரலிடம் கூறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.