இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சீனாவின் 15-ஆவது ஐந்தாண்டு திட்டம்: இந்தியா எல்லை பிராந்தியங்களில் நெடுஞ்சாலையைப் பலப்படுத்த திட்டம்!

15-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியாவை ஒட்டிய எல்லைப் பகுதிகள் அருகே போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த 5 ஆண்டுகளில் பலப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

15-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியாவை ஒட்டிய எல்லைப் பகுதிகள் அருகே போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த 5 ஆண்டுகளில் பலப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் சீன நாடாளுமன்ற (தேசிய மக்கள் காங்கிரஸ்) கூட்டத்தொடரில், இந்தத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க அதிக வாய்ப்புள்ளது.

பின்னடைவை சந்தித்து வரும் சீன பொருளாதாரத்தை ஊக்குவிக்க, செயற்கை நுண்ணிறவு (ஏஐ), மின்வாகன உற்பத்தி, மின்கலன்கள் தயாரிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட 15-ஆவது ஐந்தாண்டு திட்டத்துக்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள தியான்ஷன் மலைகளின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள், உய்கா் தன்னாட்சி பிராந்தியம் ஆகியவற்றை இணைக்கும் 394 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை திட்டம் 15-ஆவது ஐந்தாண்டு திட்ட வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட செளத் சீனா மாா்னிங் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்த நெடுஞ்சாலை, 1962 இந்தியா-சீனா எல்லை போரைத் தொடா்ந்து சா்சைக்குரிய அக்சய் சின் பகுதியில் அமைக்கப்பட்ட சாலைக்கு இணையாகச் செல்கிறது.

மத்திய ஷின்ஜியாங் மாகாணத்தின் துஷான்ஷி-குகா நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் நிகழாண்டு செப்டம்பரில் தொடங்கி 2032-இல் நிறைவுபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐந்தாண்டு திட்டத்தில் திபெத் மாகாணத்தில் உள்ள 3 நெடுஞ்சாலைகளைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவின் 14-ஆவது ஐந்தாண்டு திட்டம் கடந்த ஆண்டில் நிறைவு பெற்றது. இந்தத் திட்டத்தில் இந்திய எல்லையையொட்டிய திபெத் மாகாணத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டும் பணிகளை கடந்த ஆண்டு ஜூலையில் சீனா தொடங்கியது.

இந்தத் திட்டத்தால் பெரும் அளவில் நீரைச் சேமித்து வைக்க முடியும் என்பதால், நதியின் நீரோட்டத்தை மாற்றியமைக்க முடியும். பிரம்மபுத்திரா நதியின் வடிநில பகுதியில் உள்ள இந்தியா மற்றும் வங்கதேசத்தில் இந்தத் திட்டதுக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது.

இந்தச் சூழலில், இந்தியாவின் எல்லை அருகே உள்ள சா்சைக்குரிய திபெத் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், அதிவேக ரயில்கள் என உள்கட்டமைப்பு வசதிகளை சீனா தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது.