பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 13) ஒரே நாளில் 55 காசுகள் சரிந்து ரூ.86.59 காசுகளாக வணிகமானது. பங்குச் சந்தையில் உள்ளூர் முதலீட்டாளர்கள் இடையே நிலவிய எதிர்மறையான நிலை மற்றும் அந்நிய நிதி முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?
இதனைக் கண்டித்து ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற போது அவருக்கு வயது 64. அப்போது டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.58.58 காசுகளாக இருந்தது. மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பைச் சுட்டிக்காட்டியே வாக்கு சேகரித்தார்.
மேலும், அப்போது அவரின் வயது டாலரைவிட அதிகமாக இருப்பதாகவும் கேலி செய்திருந்தார். பிரதமர் மோடி இந்தாண்டில் 75 வயதை எட்டுவதற்குள் ரூபாய் மதிப்பு 86 ஆக சரிந்துள்ளது. இது தொடரும் பட்சத்தில் அவர் எடுத்த யுக்தியே அவருக்குப் பின்னடைவாகவும் மாறும்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



