காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு: ராகுல், சோனியா பங்கேற்பு!
காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் ராகுல் காந்தி, சோனியா பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா காந்தி பவன் புதன்கிழமை காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.
காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் ராகுல் காந்தி, சோனியா பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முதல் பிரிவினை 1969 ஆம் ஆண்டில் ஏற்பட்டதிலிருந்து, அக்கட்சி தலைமை அலுவலகம் குறித்த பிரச்னை தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில், தில்லியில் தீன் தயாள் உபாத்யாய சாலையில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா காந்தி பவன் புதன்கிழமை காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலர்கள் பிரியங்கா காந்தி, சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






