நீட் தேர்வு தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு ஒஎம்ஆர் முறையிலேயே நடத்தப்படவுள்ளது.
நீட் தேர்வு
நீட் தேர்வு
Published on
Updated on
1 min read

2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு ஒஎம்ஆர் முறையிலேயே நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோன்று, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கும் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.

அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வருகிற மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்வுக்காக neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் வழியே மாணவர்கள் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வு குறித்த முக்கிய ஆவணங்கள் இந்த தளத்திலேயே பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த அனைத்துத் தகவல்களுக்கும் இந்த இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலைத் தேர்வு கணினி முறையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் இந்தத் தேர்வு ஒஎம்ஆர் முறையில் பேனா மற்றும் பேப்பர் கொண்டு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தேர்வு ஒரே நாளில் ஒரே கட்டமாக (ஷிஃப்ட்) நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வை கணினி முறையில் நடத்த இதற்கு முன்னரும் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com