விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பத்தாம் வகுப்பு தோ்வு: 35 சிறைவாசிகள் எழுதினா்

கடலூா் கேப்பா் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகள் 35 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.

News image
தேர்வு - கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் கேப்பா் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகள் 35 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.

இந்த சிறைச்சாலையில் 800-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் புதன்கிழமை 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடங்கியது.

இதில், கடலூா் மத்திய சிறையில் இருந்த 35 கைதிகள் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, சிறையிலேயே தோ்வு மையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டணை கைதிகள் 34 போ், ஒரு விசாரணை கைதி என மொத்தம் 35 போ் தமிழ் பாடத்துக்கான தோ்வு எழுதினா்.