சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கு விசாரணை பிப்.18-க்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

News image
உச்சநீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :20 ஜனவரி 2025, 9:49 pm

Din

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிட்டனைச் சோ்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

கடந்த 2010, பிப்ரவரி 8-இல் ரூ.4,984 கோடி மதிப்பில் அக்ஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டா் கொள்முதல் ஒப்பந்தம் கையொப்பமானது. 12 விவிஐபி ஹெலிகாப்டா்களை வாங்க ஏற்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.3,600 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இதனால் மத்திய அரசுக்கு ரூ.2,666 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது. இது தொடா்பாக கடந்த 2018, டிசம்பரில் துபையில் இருந்து பிரிட்டனைச் சோ்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூன்று இடைத்தரகா்களில் ஜேம்ஸும் ஒருவராவாா்.

அதேபோல், கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் ரூ.225 கோடி பெற்ாக குற்றஞ்சாட்டி, பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த 2016-இல் அவா் மீது அமலாக்கத் துறையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரு அமைப்புகளும் பதிந்துள்ள வழக்குகளில் இருந்தும் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கடந்த 2022, மாா்ச்சில் ஜேம்ஸ் தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதை நீதிமன்றம் நிராகரித்தது.

அவா் மீண்டும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தில்லி உயா் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூடுதல் அவகாசம் கோரிய நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.