அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புவேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!

பத்ம ஸ்ரீ விருது பெறும் 2 தமிழர்கள்!

2025ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்ம ஸ்ரீ விருது பெறும் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் - முகநூல் | வேலு ஆசான்

Published On :

2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமூகப்பணி, வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டில் பத்ம ஸ்ரீ விருது பெறும் 12 விருதாளர்கள் அறிவிக்கப்பட்டது. அவர்களில் சிலர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தவில் இசைக்கலையில் 50 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் வாய்ந்த புதுச்சேரியைச் சேர்ந்த இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற ஹரியாணாவைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங்குக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிதல், தடுப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் தில்லியைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான டாக்டர் நீரஜா பட்லாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

அறக்கட்டளையின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 22 ஆண்டுகளாக உதவிவரும் பிகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பீம் சிங்குக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்தைச் சேர்ந்த விவசாயி ஹாங்திங், இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிமன் ஷர்மா இருவருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக தொழில்முனைவோர் சாலி ஹோல்கர், ஜக்தீஷ் ஜோஷிலா, மராத்தி எழுத்தாளர் மாருதி புஜங்ராவ் சிட்டம்பள்ளிக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஷெய்கா அல் சபாவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.