தில்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி!
இடிபாடுகளில் சிக்கியிருந்த 12 பேர் மீட்பு!

PTI

PTI
புது தில்லி : தில்லியின் புராரியில் உள்ள ஆஸ்காா் பப்ளிக் பள்ளி அருகே நேற்று(ஜன. 27) மாலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி நேற்றிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீட்பு நடவடிக்கைகளில் உதவ 9 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் பலா் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களுள் இருவர் உயிரிழந்துவிட்டதாகவும் இன்று(ஜன. 28) காலை நிலவரப்படி, இடிபாடுகளில் சிக்கியிருந்த 12 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்ப்புபணி தொடர்ந்து நடைபெறுகிறது.
கட்டடம் இடிந்ததற்கு கட்டமைப்பு பலவீனம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...