கும்பமேளா நிர்வாகத்தை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்: அகிலேஷ்

கும்பமேளா நிர்வாகத்தை ராணுவத்திடம் ஒப்படைக்க அகிலேஷ் யாதவ் கோரிக்கை...
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா பகுதி
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா பகுதிPTI
Published on
Updated on
1 min read

மகா கும்பமேளா நிர்வாகம் மற்றும் மேலாண்மைப் பணிகளை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வை கையாளும் நம்பிக்கையை உத்தரப் பிரதேச மாநில அரசு நம்பிக்கையை இழந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகின்றது. மௌனி அமாவாசையான இன்று திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்டநெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் பலியான நிலையில், 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

“காயமடைந்தவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் சிறந்த மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட வேண்டும். இறந்தவர்களின் உடலை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.

உலகத் தரம் என்ற வார்த்தைக்குப் பின்னால் உள்ள உண்மை தற்போது அம்பலமாகிவிட்டது. பொய்ப் பிரசாரம் செய்தவர்கள் இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

மகா கும்பமேளாவுக்கு வந்த துறவிகள் மற்றும் பக்தர்களிடையே பாதுகாப்பு நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த நிர்வாகம் மற்றும் மேலாண்மை பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைக்காமல், உடனடியாக இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.