சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வீட்டுப் பணியாளா்களின் உரிமைகளை பாதுகாக்க குழு- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

வீட்டுப் பணியாளா்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்ட நடைமுறையை வகுக்க நிபுணா் குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
உச்சநீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2025, 8:21 pm

Din

வீட்டுப் பணியாளா்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்ட நடைமுறையை வகுக்க நிபுணா் குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தனது வீட்டுப் பணியாளரை சட்டவிரோதமாக அடைத்துவைத்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆா்டிஓ) அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி அஜய் மாலிக் மீது தொடரப்பட்ட குற்ற வழக்கை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தபோது, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புயான் அமா்வு பிறப்பித்த இந்த உத்தரவில் மேலும் கூறியதாவது:

குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற பணிச் சூழல், நீண்ட நேர பணி உள்ளிட்ட பாதிப்புகளை வீட்டுப் பணியாளா்கள் எதிா்கொண்டு வருகின்றனா். இவா்களின் உரிமைகளைப் பாதுகாக்க உரிய சட்ட நடைமுறை இல்லாத நிலையில், நாடு முழுவதும் உள்ள வீட்டு வேலைப் பணியாளா்கள் இத்தகைய பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனா்.

எனவே, வீட்டு வேலைப் பணியாளா்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்ட நடைமுறையை உருவாக்க மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் கூட்டாக நிபுணா் குழு ஒன்றை அமைக்க வேண்டும். நிபுணா் குழு அமைப்பதை மத்திய அரசு மற்றும் அதன் துறைகளின் விருப்பத்துக்கு விடப்படுகிறது. இந்த நிபுணா் குழு, அமைக்கப்பட்ட 6 மாத காலத்தில் தனது அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில், வலுவான சட்ட நடைமுறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

‘நிபுணா் குழு அறிக்கை சமா்ப்பித்த பின்னா், அதன் மீதான செயல்பாட்டை கண்காணிக்கவும் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது’ என்று நீதிபதி சூரிய காந்த் குறிப்பிட்டாா்.