எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வக்ஃப் சட்ட மசோதா திருத்தங்கள்: ஓம் பிர்லாவிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

வக்ஃப் சட்ட மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அறிக்கை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பிப்பு.

News image

ஓம் பிர்லாவிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

Updated On :30 ஜனவரி 2025, 12:50 pm IST

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான அறிக்கை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவினர் வியாழக்கிழமை சமர்ப்பித்தனர்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு திங்கள்கிழமை கூடியபோது, மசோதாவில் 14 சட்டப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பாக குழுவில் இடம்பெற்றுள்ள ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 32 திருத்த பரிந்துரைகளை கூட்டுக் குழு முழுமையாக ஏற்றுக்கொண்டது. எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை முழுமையாக நிராகரித்தது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டு, அதுதொடா்பான 655 பக்ககங்கள் கொண்ட வரைவு அறிக்கை கூட்டுக் குழு உறுப்பினா்கள் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை இரவு விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை காலையில் கூடிய நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில், வாக்கெடுப்பு முறையில் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரைவு அறிக்கைக்கு 15 உறுப்பினா்கள் ஆதரவாகவும், 11 போ் எதிராகவும் வாக்களித்தனா். பெரும்பான்மை அடிப்படையில் திருத்தங்கள் தொடா்பான வரைவு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூட்டுக் குழுத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான ஜகதாம்பிகா பால் அறிவித்தாா்.

இதற்கு குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா். ‘வரைவு அறிக்கை முந்தைய நாள் இரவுதான் எங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதை முழுமையாகப் படிக்கக்கூட நேரம் தரவில்லை. இத்தகைய சூழலில் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்திருப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. வக்ஃப் வாரியத்தை அழிக்கும் செயல்’ என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

இந்த நிலையில், ஜகதாம்பிகா பால் தலைமையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை அவரது அறையில் சந்தித்த கூட்டுக்குழுவினர் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒப்புதல்?

வரும் 31-ஆம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.