பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் இடம்பெறும்: மோடி

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி உரை...
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி Sansad TV
Published on
Updated on
1 min read

பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் இடம்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.

மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 8-ஆவது முறையாக அமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா்.

இந்த நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசியதாவது:

"பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அன்னை லட்சுமியை பிரார்த்திக்கிறேன். ஏழை, எளிய மக்களை அன்னை லட்சுமி ஆசிர்வதிப்பார்.

இந்திய ஜனநாயக நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்தது பெருமைக்குரிய விஷயம். உலக அரங்கில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. மூன்றாவது ஆட்சியில் முதல் முழு பட்ஜெட் அறிக்கை இது.

2047 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​வளர்ந்த நாடு என்ற இலக்கை அடையும்.

இந்த தொடரில் ஏராளமான மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. மக்களின் மேம்பாட்டுக்காக நாள்தோறும் பணியாற்றி வருகிறோம்.

மூன்றாவது முறையாக மக்கள் ஆட்சி செய்வதற்கு வாய்ப்பளித்துள்ளனர். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன். அனைவருக்குமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com